வீரியமெடுக்கும் கொரோனா தொற்று., உச்சம் தொடும் பலி எண்ணிக்கை., வெளியான ஷாக்கிங் அப்டேட்!!

0
வீரியமெடுக்கும் கொரோனா தொற்று., உச்சம் தொடும் பலி எண்ணிக்கை., வெளியான ஷாக்கிங் அப்டேட்!!
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து உலக மக்களை பாதிக்க தொடங்கியது. இதையடுத்து தீவிரமடைந்து வந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க WHO உலக மக்களுக்கு தடுப்பூசியை வலியுறுத்தியது. இதன் பிறகு தான் கொரோனா வைரஸ் பரவுவதன் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது.
இப்படி இருக்கையில் உருமாறிய கொரோனா தற்போது ஜே என் 1 என்ற பெயரில் மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி கடந்த எட்டு மணி நேரத்தில் மட்டும்  சத்தீஸ்கர்  மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 மணி நேரத்தில் 157 பேருக்கு  புதிதாக கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here