கிரெடிட் கார்டு பயனாளர்களே., சிபில் ஸ்கோரை அதிகப்படுத்த வேண்டுமா? டிப்ஸ் உள்ளே!!!

0
கிரெடிட் கார்டு பயனாளர்களே., சிபில் ஸ்கோரை அதிகப்படுத்த வேண்டுமா? டிப்ஸ் உள்ளே!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வங்கி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு குறித்த முழு விவரங்கள் செலவு செய்து விட்டு, உரிய நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் சிபில் ஸ்கோர் இழப்பு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே கிரெடிட் கார்டு மூலம் சிக்கல் இல்லாமல் சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி? என பார்ப்போம்.

அதன்படி,

  • கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பாக, அதன் தேவை மற்றும் எப்படி? பயன்படுத்த போகிறோம் என்பதை யோசித்து அப்ளை செய்யுங்கள்.
  • ஒருவேளை மிதமான கிரெடிட் லிமிட் போதுமென்றால் அதிக கிரெடிட் லிமிட் கொண்ட கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • கிரெடிட் கார்டு மூலம் கேஷ் வித்டிராவல் செய்து கொள்ளலாம் என்றாலும் கூட முடிந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்தினால் அதிக வட்டி மட்டுமல்லாமல் சிபில் ஸ்கோரையும் பாதிக்கும்.
  • கிரெடிட் லிமிட்டை 100 சதவீதம் பயன்படுத்தாமல் 30 சதவீதத்தில் பராமரித்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.
  • அதேபோல் நீண்ட நாட்களாக கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் இருப்பதால், உடனே ஒரு சிலர் மூடி விடுகின்றனர். இதனால் சிபில் ஸ்கோர் பாதிக்க வாய்ப்புள்ளதால், அதனை ரின்யூ செய்யாமல் விடுவது நல்லது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here