தொடர்ந்து 3 ஆண்டுகளாக உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இதன்படி அவசர கால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் இன்கோவேக் தடுப்பு மருந்து இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கோவிட் ஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒமிக்ரான் வைரசால் மீண்டும் நோய் தொற்றுக்கு உள்ளாகின்றனர். இதனால் பூஸ்டர் தடுப்பூசி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூக்கு வழி செலுத்தும் இன்கோவேக் தடுப்பூசி முறை இந்தியாவில் முதல் முறையாக இன்று மத்திய சுகாதாரத்துறை தொடங்கி வைக்கிறது.
தமிழகத்தின் இந்த நீண்ட நாள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு., ரூ.1083.13 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு!!
மேலும் இந்த பணியை முதல் முறையாக மேற்கொள்ளும் பெருமையை பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து தனியார் மருத்துவமனையில் இந்த தடுப்பூசியின் விலை ரூ.800 என்றும், அரசு மருத்துவமனைகளில் ரூ.350 எனவும் விற்பனைக்கு வரவுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.