நடிகை டாப்ஸி, இயக்குனர் அனுராக் காஷ்யப் வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனை!!

0

பாலிவுட் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமானவரி சோதனை

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை டாப்ஸியின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வீட்டிலும் சோதனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் வரிசெலுத்தாமல் ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த புகாரின் அடிப்படையில் இந்த இரு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. மேலும் திரைப்பட தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகியோரது அலுவலகங்களிலும், வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

#NZvsAUS டி20 போட்டி – 208 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா!!

மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள 20 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல்கள் வந்துள்ளது. இதில் பாண்டோம் பிலிம்ஸ் நிறுவனம், இயக்குனர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால், விக்ரமாதித்யா ஆகியோரால் கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. சில காரணங்களால் இந்த நிறுவனம் 2018ம் ஆண்டு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here