முக்கிய சினிமா பிரபலங்களின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு – அடுத்தடுத்து நடக்கும் அதிரடி நடவடிக்கை!

0

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை ரெய்டு:

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் கலைப்புலி எஸ்.தாணு. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், தனுஷ் ஆகியோர்களின் படங்களை தயாரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வரும் மதுரையை சேர்ந்த அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

செம்பருத்தி சீரியல் மீது மீண்டும் குற்றசாட்டு.., சம்பளமே கொடுக்கல.., நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!!

இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ரெய்டில் மேலும் சில தயாரிப்பாளர்கள் பெயர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here