புதிய வருமான வரி தளத்தில் பல்வேறு குறைபாடுகள் …! நிர்மலா சீதாராமன் நடவடிக்கை!!!

0

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வருமான வரித்துறை தளத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் ட்விட்டர் மூலம் பல புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த தளத்தை அறிமுகப்படுத்தியது இன்ஃபோசிஸ் ஆகும். எனவே மக்கள் அந்த நிறுவனத்தை விளாசி வருகின்றனர். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

  

கடந்த ஜூன் 7ம் தேதி நீண்ட எதிர்ப்புக்கு இடையில் வருமான வரி இணையதளம் 2.0 அறிமுகம் செய்யப்பட்டது.  இதில் பல புதிய அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த இணையத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ட்விட்டர் மூலம்  மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அவர்களிடம் புகார்கள் தெரிவித்துவருகின்றனர். எனவே,இன்போசிஸ்-ஐ டேக் செய்து  நிர்மலா சீதாராமன் தனது கருத்தை தெரியப்படுத்தி உள்ளார்.


இதையடுத்து , நிர்மலா சீதாராமன்  புதிய தளத்தில் ஏற்படும் குறைபாடுகளை  சரி செய்து பிரச்சினைகளைத் தீர்க்குமாறு இன்ஃபோசிஸ் நிறுவனத்தையும் அதன் தலைவர் நந்தன் நிலேகனியையும் நிர்மலா சீதாராமன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனமும் நந்தன் நிலேகனியும் தகுந்த நடவடிக்கை எடுத்து புதிய வலைத்தளத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனே சரி செயும்மாறு கேட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here