வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப் 30 வரை நீட்டிப்பு – வருமான வரித்துறை அறிக்கை!

0
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப் 30 வரை நீட்டிப்பு - வருமான வரித்துறை அறிக்கை!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப் 30 வரை நீட்டிப்பு - வருமான வரித்துறை அறிக்கை!

வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

காலக்கெடு நீட்டிப்பு:

நாட்டில் பொதுமக்கள் அதாவது இந்திய குடிமகன் செலுத்த கூடிய வருமானத்தை கணக்கீடு செய்வதற்கும், வரி தாக்கல் குறித்து ஆய்வு செய்வதற்கும் வருமான வரித்துறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிமகன் செலுத்தும் வருமான வரி குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்க கூடிய மொத்த பொறுப்பும் இந்த துறையிடம் உள்ளது. இந்நிலையில் நேரடி வரி தொடர்பாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் நோக்கில் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டம் கொண்டுவரப்பட்டது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப் 30 வரை நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப் 30 வரை நீட்டிப்பு

இதனை அடுத்து இந்த திட்டத்தின் கீழ் வருமான வரி தாக்கல் செய்யப்படும் காலக்கெடு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வட்டித் தொகையுடன் சேர்த்து அக்டோபா் 31-க்குள் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மேலும் தங்க முதலீட்டு பத்திர திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கெடு அக்டோபர் 31-ல் இருந்து டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான நான்கு வருட காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு சலுகை அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப் 30 வரை நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப் 30 வரை நீட்டிப்பு

இதன் அடிப்படையில், காலக்கெடு மற்றும் கட்டணங்கள் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தாமதக் கட்டணம் செலுத்த கடைசி தேதி நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளத்தில் கோளாறு ஏற்பட்டதால், வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட சிரமம் கருதி இந்த கால நீட்டிப்பு நடந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here