யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகளா நீங்கள்? தமிழக அரசின் இந்த ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

0

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 26 விதமான உயர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், முதல் நிலை தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள் பயிற்சி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதாவது, 1000 பேரை தேர்வு செய்து மாதம் ரூ.7,500 விதம் 10 மாதங்களுக்கு ரூ.75,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இத்தகைய ஊக்கத்தொகையை பெற விரும்பும் பட்டதாரிகளை தேர்வு செய்வதற்காக வரும் செப்டம்பர் 10ம் தேதி மதிப்பீட்டு தேர்வு ஒன்றை அரசு நடத்த உள்ளது. இந்த தேர்விற்கு இன்று (ஆகஸ்ட் 2) முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடிப்படையில், அரசின் ஊக்கத்தொகை பெறுவதற்கான 1000 பேர் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பள்ளி மாணவர்களே, செவ்வாய் கிழமையில் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here