சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!!

0

கொரோனா நோய்த்தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும்‌ இச்சூழலில்‌ நோய்‌ தொற்று பரவலின்‌ தீவிரத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஜூன் 7 வரை  அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் வெளியே வராமல் ஊரடங்கை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியது. ஆனால் இந்த நோய்த்தொற்றை எதிர்த்து போராட களத்திற்கு வருபவர்கள் சுகாதார பணியாளர்கள். தொற்று பரவலை முற்றிலும் தடுக்க, சுகாதார பணியாளர்களின் பணி இன்றியமையாதது.

பல மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களின் சேவையை கெளரவிக்கும்‌ வண்ணம்‌ அரசு ஊக்கத்தொகை வழங்கி அவர்கள்‌ பணியை ஊக்குவிக்க வேண்டும்‌ என்று பலர் கோரிக்கை விடுத்தனர். அனால் அரசு இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தற்போது கொரோனா நோய்த்தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாணையை வெளியிட்டது. மேலும் 108 அவசர ஊர்தி, 104 அமரர் ஊர்தி பணியாளர்களுக்கு  ரூ.15,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here