6 நாளாக தொடரும் மீட்பு பணி.,  வெற்றி துரைசாமி DNA பரிசோதனை குறித்து முக்கிய அப்டேட் வைரல்!!

0
 6 நாளாக தொடரும் மீட்பு பணி.,  வெற்றி துரைசாமி DNA பரிசோதனை குறித்து முக்கிய அப்டேட் வைரல்!!
அதிமுக எம்எல்ஏவான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் கடந்த வாரம் ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து மலைப்பாங்கான இடத்திற்கு வாடகை காரின் மூலம் பயணம் செய்துள்ளனர். அந்த நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய கார் சட்லஜ் நதிக்கரையின் அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் அந்த விபத்தில் கார் சட்லஜ் நதியில் மூழ்கியது.
அந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் கோபிநாத்திற்கு மருத்துவமனை சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் வெற்றி துரைசாமி குறித்து இப்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 6 நாட்களுக்கு மேலாக மீட்பு பணியினர் சட்லஜ் நதிக்கரையில் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த மூளையின் திசுவில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், DNA பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் ரத்த மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட DNA வெற்றி துரைசாமியின் பெற்றோர்களின் DNAவுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெற்றி துரைசாமி DNA பரிசோதனை முடிவு நாளை வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here