இந்த சீரியலுக்கு எண்ட் கார்டா? அதுக்கெல்லாம் இப்போ வாய்ப்பே இல்லை.., வெளியான பகீர் தகவல்!!

0
இந்த சீரியலுக்கு எண்ட் கார்டா? அதுக்கெல்லாம் இப்போ வாய்ப்பே இல்லை.., வெளியான பகீர் தகவல்!!
இந்த சீரியலுக்கு எண்ட் கார்டா? அதுக்கெல்லாம் இப்போ வாய்ப்பே இல்லை.., வெளியான பகீர் தகவல்!!

சின்ன திரையில் உச்சகட்ட பரபரப்பில் ஒளிபரப்பாகும் சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்க்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலை ஆரம்பத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் விரும்பி பார்த்து வந்தனர். ஆனால் போகப் போக இந்த சீரியலை அனைவரும் வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு காரணம் இந்த சீரியலின் இயக்குனர் கதையை ஜவ்வாக இழுத்துக் கொண்டு போவது தான். மேலும் தற்போது வரை DNA ரிசல்ட் வருமா? இல்லையா?, இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா ஒன்று சேர்வார்களா? மாட்டார்களா? என்பதற்கு இப்போது வரை பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது . ஆனால் இப்போது இந்த சீரியல் முடிவடைவதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

செந்திலை காப்பாற்ற சரவணன் எடுத்த முடிவு.., சிவகாமி செய்யப்போவது என்ன? பரபரப்பில் ராஜாராணி 2!!

ஏனென்றால் இக்கதையின் வில்லியான வெண்பா மறுபடியும் DNA ரிப்போர்ட்டை மாற்றி வைத்து பல சூழ்ச்சிகளை செய்வாராம். இதை அறியாத பாரதி மீண்டும் கண்ணம்மா மீது தான் தப்பு என நினைத்துக் கொண்டு ஒதுக்கி வைப்பாராம். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்க பிறகு துர்கா வந்து தான் அனைத்து உண்மைகளையும் பாரதிக்கு புரிய வைப்பாராம். இதன் பிறகுதான் இந்த சீரியல் முடிவடைய போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை அறிந்த நெட்டிசன்கள் எப்பதான் இந்த சீரியலை முடிப்பீங்க, இயக்குனருக்கு மனசாட்சியே இல்லையா? என புலம்பி தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here