டெஸ்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள ரிஷப் பண்ட்…, வெளியான புள்ளிப் பட்டியல்!!

0
டெஸ்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள ரிஷப் பண்ட்..., வெளியான புள்ளிப் பட்டியல்!!
டெஸ்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள ரிஷப் பண்ட்..., வெளியான புள்ளிப் பட்டியல்!!

கார் விபத்தில் சிக்கி, சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளபட்டு தற்போது ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், இந்திய அணிக்காக டெஸ்டில் படைத்த சாதனை தற்போது வெளியாகி உள்ளது.

ரிஷப் பண்ட்:

இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த போட்டியில், 480 ரன்களை தனது முதல் இன்னிங்ஸில் குவித்த ஆஸ்திரேலிய அணியின் இலக்கை துரத்தி இந்திய அணி நிதானமாக எதிர்த்து விளையாடி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கி, தற்போது ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட்டின், டெஸ்ட் சாதனை தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடும் ரிஷப் பண்ட், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 773 புள்ளிகளுடன் 8 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சச்சின், ராகுல் டிராவிட் வரிசையில் இணைந்த புஜாரா…, டெஸ்டில் 2000 ரன்களை கடந்து அசத்தல்!!

கடந்த 2020ம் ஆண்டில் இருந்து, இந்திய அணிக்காக 38 இன்னிங்ஸில் விளையாடி உள்ள இவர், 12 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததுடன், 1517 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட பட்டியலில், புஜாரா 50 இன்னிங்ஸில் 1405, ரோஹித் சர்மா 30 இன்னிங்ஸில் 1238, விராட் கோலி 41 இன்னிங்ஸில் 1028 மற்றும் சுப்மன் கில் 28 இன்னிங்ஸில் 836 ரன்களுடன் டாப் 5 யில் இடம் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here