நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் !!!

0

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் !!!

தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் வெகு வேகமாக பரவுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று குறிப்பிட்ட மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது.

எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொண்டால் பாதிப்பு ஏற்படுவது குறையும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று ஆயுஷ் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட சில வழிமுறைகள் இதோ.

பொது வழிமுறைகள் ;

1. நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.
2. யோகாசனம், பிராணயாமா மற்றும் தியானம் குறைந்தது 30 நிமிடங்கள் தினசரி பயிற்சி செய்யலாம்
என்று அறிவுறுத்தியது.
3. மஞ்சள், சீரகம், கொத்தமல்லி மற்றும் பூண்டு ஆகியவற்றை அன்றாட சமையலில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் வழிமுறைகள் :

150 மில்லி சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பருகலாம்.

மேற்கண்ட நடவடிக்கைகள் தனிநபரின் வசதி பொறுத்து முடிந்தவரை பின்பற்றலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here