தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மாவீரன் படம் வெற்றியை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராணுவ வீரராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நேரத்தில் இமான் தனது முதல் மனைவி என்னை விட்டு பிரிந்ததற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். வெளியே சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் தான் பாதிக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஒரு படத்திற்காக பேட்டி கொடுத்தபோது செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அதற்கு பதில் அளித்த இமான் “இறைவன் பார்த்துக் கொள்வார். எது சரி தவறு என்பது அவருக்கு தெரியும். அவரே இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என கூறியுள்ளார்.