இசைஞானி இளையராஜா, தனது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் இசைக் கச்சேரியில், நடிகர் வடிவேலு பாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
இசை திரை உலகின் ஜாம்பவானாக வலம் வரும் இசைஞானி இளையராஜா, தனது 80வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரது இசை நிகழ்ச்சி சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகர்களில் நடைபெற்றது. இதையடுத்து, தற்போது இளையராஜா இசை கச்சேரி ஜூன் 26ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், வைகைப்புயல் வடிவேலு கலந்து கொண்டு, பாடல்கள் பாட உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலு இதற்கு முன், முதல் முறையாக இளையராஜா இசையில் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற “போடா போடா புண்ணாக்கு” என்ற பாடலை பாடியிருந்தார். அதுமட்டுமல்லாமல், இவர் இதுவரை 3 பாடல்களை பாடியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த வடிவேலு, தனது சொந்த மண்ணான மீனாட்சி பட்டணத்தில், இசைஞானி இசையில் பாடுவது எனது பாக்கியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#இசையென்றால்இளையராஜா#Isaiyendralilaiyaraaja @ilaiyaraaja
Tickets 🎟 https://t.co/fwN4dHCKpb@paytminsider
📆 #June26 Sunday
📍 MADURAI #IlaiyaraajaLiveInConcert#Vadivelu @NoiseandGrains pic.twitter.com/3mygFdNDkH— IMM (@IMMOffl) June 16, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்