இளையராஜாவுக்கு கிடைக்கப்போகும் கௌரவம்., பிரதமரால் வரும் அங்கீகாரம் – குவியும் வாழ்த்து!!

0
இளையராஜாவுக்கு கிடைக்கப்போகும் கௌரவம்., பிரதமரால் வரும் அங்கீகாரம் - குவியும் வாழ்த்து!!
இளையராஜாவுக்கு கிடைக்கப்போகும் கௌரவம்., பிரதமரால் வரும் அங்கீகாரம் - குவியும் வாழ்த்து!!

இசைஞானி இளையராஜாவுக்கு, பிரதமர் கையால் நாளை மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்க உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

குவியும் வாழ்த்து :

தமிழ் சினிமாவின் இசைஞானி என அழைக்கப்படுபவர் இளையராஜா. இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, தனது இசை கச்சேரிகளை நடத்தி வரும் இவர், கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய சொத்தாக திகழ்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரின் பெருமைக்கு அங்கீகாரம் சேர்க்கும் வகையில், அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் இவர் பிறந்தநாளன்று, அவருடைய பாடலுடன் கூடிய போட்டோ இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இளையராஜாவுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(10.11.2022) – முழு விவரம் உள்ளே!!

நவம்பர் 11 ஆம் தேதியான நாளை திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில், நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here