இளையராஜாவுக்கு வந்த அடுத்த சிக்கல்., மனுசன மனுசனா பாருங்க – கொந்தளித்த நெட்டிசன்கள்!!

0
இளையராஜா இசையில் பாடும் நடிகர் வடிவேலு - இணையத்தில்  வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இளையராஜாவுக்கு வந்த அடுத்த சிக்கல்., மனுசன மனுசனா பாருங்க - கொந்தளித்த நெட்டிசன்கள்!!

இசைஞானி இளையராஜா, பிரபல பெண் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனை தனது ஸ்டுடியோவில், தரையில் அமர வைத்த செயல் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்:

தமிழ் சினிமாவின் பெண் இயக்குனராகவும், குணச்சித்திர நடிகையாகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படம் சர்வதேச விருதுகளை வென்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது சமுத்திரக்கனி மற்றும் அபிராமி ஆகியோர் நடிப்பில்  ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் இளையராஜா, இசையமைக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இது குறித்த தகவல்களுக்காக, இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் லட்சுமி சந்தித்தார். அப்போது அவர் தரையிலும், இளையராஜா சேரிலும் அமர்ந்திருப்பது போன்ற போட்டோ வெளியானது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள்,  முதலில் மனிதனை மனிதனாக மதியுங்கள். ஏன் அவர்களுக்கு சேர் போட்டா குறைஞ்சு போயிடுவீங்களா? என கமெண்ட் செய்தனர். ஆனால் இது குறித்து பதிவிட்டு லட்சுமி, இசையில் அவர் கடவுள் மாதிரி, அவர் அருகில் கீழே அமர்ந்திருந்ததை பாக்கியமாக கருதுகிறேன் இது குறித்து யாரும் தவறாக பேச வேண்டாம் என பதிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here