மருத்துவமனையில் இருக்கும் பாரதி ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா.., என்ன ஒரு நட்பு பாருங்களே!!

0

அண்மையில் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பாரதிராஜாவிடம் இளையராஜா சுவாரசியமாக பேசி இருந்த ஆடியோ கிளிப் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

தமிழ் சினிமா வட்டாரங்களில் மண்வாசனை மணக்கும் கிராமத்து கதைகளை எடுத்து பிரபலமானவர் தான் இயக்குனர் சிகரம் பாரதிராஜா. இந்நாள் வரை ரசிகர்களால் பேசப்படும் ஒரு இயக்குனர் என்றால் அவர் பாரதிராஜா. இவர் காதல் காட்சிகளை பல்வேறு கோணத்தில் எடுத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து அனைவர்க்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் சிகரம் பாரதிராஜா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

When are they coming together again?

இவர் சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இவரது நடிப்பு வெகுவான பாராட்டை பெற்றது. இதனை தொடர்ந்து உடல் நலம் சரியில்லாமல் எம் ஜி எம் மருத்துவமனையின் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாரதிராஜாவிடம் இளையராஜா சுவாரசியமாக பேசி இருந்த ஆடியோ கிளிப் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மருத்துவமனைக்கு பார்க்க சென்ற இளையராஜா நான் உடனடியாக வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறேன்.

நான் திரும்பி வந்து உன்னை பார்க்கிறேன் என்று கூறி மருத்துவமனையில் இருந்து கிளம்பி உள்ளார். அதனை தொடர்ந்து காரில் சென்றபோது வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் “நீ வேமா குணமாகி வந்துருவ, நம் நண்பர் ஒருவர் உனக்கு 80 வது கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுகிறார். நான் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த உடனே அந்த நிகழ்ச்சியை சிறப்பாக பண்ணிடலாம்” ஆடியோவில் பேசி அனுப்பி உள்ளார். இந்த ஆடியோ தொகுப்பு இயக்குனர் பாரதிராஜாவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here