பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் தொடர் – ஐஐடி எடுக்கும் புது முயற்சி என்ன?

0
பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் தொடர் - ஐஐடி எடுக்கும் புது முயற்சி என்ன?
பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் தொடர் - ஐஐடி எடுக்கும் புது முயற்சி என்ன?

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்க ஐஐடி மெட்ராஸ், இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்-உடன் இணைந்து குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் புது முயற்சி:

அடுத்த 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகளில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து புதிய மென்பொருள் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்யும் வகையில் குத்துச்சண்டை பகுப்பாய்வுக்கான ‘ஸ்மார்ட்பாக்சர்’ மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த ஸ்மார்ட்பாக்சர் மென்பொருள் குறைந்த செலவில் அமைக்கப்பட்டு பகுப்பாய்வுத் தளம், அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களை பயன்படுத்தி குத்துச்சண்டை மதிப்பீடுக்கான நான்கு முக்கிய அம்சங்களைக் கணக்கிட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த உதவும் என்றும், இதனை குறிக்கோளாகக் கொண்டு தான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய முடியலாம் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here