உலகின் முதல் ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு – ஐஐடி மெட்ராஸ் அறிமுகம்!!

0
Chennai IIT
Chennai IIT

ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் ஐ.ஐ.டி மெட்ராஸ் உலகின் முதல் ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது குறித்த முழு விபரங்கள் இந்த பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.

ஐஐடி மெட்ராஸ்:

தற்போதைய காலத்தின் தேவையைப் பொறுத்து, ஐஐடி மெட்ராஸ் தரவு அறிவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் (Technology Programming and Data Science) உலகின் முதல் ஆன்லைன் பிஎஸ்சி பட்டம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, டிஜிட்டல் தளங்கள் வழியாக ஆன்லைனில் பாடநெறி கற்றல் வழங்கப்படும், அதே நேரத்தில் தேர்வுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான சோதனையை உறுதி செய்வதற்காக ஆஃப்லைன் வடிவத்தில் நடத்தப்படும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த திட்டத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், இந்த ஐ.ஐ.டி பி.எஸ்.சி பட்டப்படிப்புக்கான நுழைவு ஜே.இ.இ மெயின் 2020 போன்ற நுழைவுத் தேர்வைக் காட்டிலும் 12 ஆம் வகுப்பு தகுதித் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

தகுதி & பிற விவரங்கள்:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸில் ஆன்லைன் பி.எஸ்சி பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் நாட்டில் எங்கிருந்தும் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கானது. திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் தகுதிவாய்ந்த வகுப்பு 12 அல்லது அதற்கு சமமான தேர்வுகள் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் இருந்து விலகிய மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கான கட்டணம் மற்றும் விண்ணப்பிப்பது தொடர்பான முழு விபரங்கள் ஐஐடி மெட்ராஸ் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here