ஒன்ஸை 1 சைடாக வீழ்த்திய ஸ்வியடெக்.., முதன் முறையாக பட்டத்தை வென்று அசத்தல்!!

0
ஒன்ஸை 1 சைடாக வீழ்த்திய ஸ்வியடெக்.., முதன் முறையாக பட்டத்தை வென்று அசத்தல்!!
ஒன்ஸை 1 சைடாக வீழ்த்திய ஸ்வியடெக்.., முதன் முறையாக பட்டத்தை வென்று அசத்தல்!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்வியடெக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

USA ஓபன் டென்னிஸ்!!

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவு சுற்றுக்கான கடைசி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் போலந்தை சேர்ந்த உலகின் முதல்நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், துனிசியாவின் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜெபர் உடன் மோதினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீரை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றிலேயே, போலந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண், இறுதிப்போட்டிக்கு முன்னேறி, சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனையை தற்போது இகா ஸ்வியாடெக் படைத்துள்ளார்.

மேலும் ஸ்வியாடெக் இந்த வருடத்தின் மூன்றாவது பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே நடப்பு ஆண்டிற்கான பிரஞ்சு ஓப்பன் மற்றும் இத்தாலி ஓபன் பட்டங்களை ஸ்வியாடெக் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தை தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கே. சினியாகோவா – பி. கிரெஜிகோவா ஜோடி, அமெரிக்காவின் சி. மெக்னலி – டி. டவுன்சென்ட் ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here