Saturday, May 15, 2021

சிவாவை பற்றி சஹானாவிடம் தப்பாக ஏத்திவிடும் இளங்கோ – விறுவிறுப்பாகும் ‘இதயத்தை திருடாதே’!!

Must Read

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சஹானா மனதில் சிவா குறித்த தப்பான புரிதலை சஹானாவின் அண்ணன் இளங்கோ ஏற்படுத்தி விடுகிறார். இதனால் சஹானா உச்சகட்ட குழப்பத்தில் உள்ளார்.

இதயத்தை திருடாதே

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல் தான் “இதயத்தை திருடாதே” இந்த சீரியலில் தற்போது சிவா மற்றும் சஹானாவிற்கு இடையேயான காதல் காட்சிகளுடன் சென்று வருகிறது. ஆரம்பத்தில் சிவா மற்றும் சஹானா இருவரும் முட்டி கொள்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், ஒரு கடத்தில் சஹானாவின் குணத்தினை புரிந்து கொள்ளும் சிவாவிற்கு சஹானா மீது காதல் வந்து விடுகிறது. இப்படியாக இருக்கு, நேற்று சிவா தன்னுடன் டான்ஸ் போட்டியில் ஆட இருக்கும் மீராவினை புகழ்ந்து தள்ளுகிறார். இதனால் சஹானா கவலை அடைந்து விடுகிறார்.

அதிலும், உச்சகட்டமாக மீரா தன்னை வீட்டில் இறக்கி விட முடியுமா என்று கேட்டதும் சிவா தனது பைக்கில் கொண்டு போய் அவரை வீட்டில் விட்டு வருகிறார். இதனால் ஆத்திரமடையும் சஹானா சிவாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் டான்ஸ் கிளப்பில் இருந்து வந்து விடுகிறார். சஹானாவின் மாற்றம் புரியாமல் சிவா வேறு தொல்லை செய்யவும் சஹானா கத்தி விட்டு சென்று விடுகிறார்.

‘குக் வித் கோமாளியின் இந்த வாரம் வேறலெவல் என்ஜாய்மென்ட்’ – வைரலாகும் புகைப்படங்கள்!!

இப்படியாக இருக்க ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் சஹானாவிடம் அவரது அண்ணன் இளங்கோ வந்து சிவா மீராவிடம் பேசுவது தப்பு என்றும் அதனை முன்பு கத்தரித்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இதனால் மொத்தமாக குழம்பி விடுகிறார் சஹானா. அதே போல் இன்று டான்ஸ் கிளப்பில் சிவா மற்றும் மீரா இருவரும் ஆடுகின்றனர்.

அதே போல் ஒரு சில நடன அசைவுகளை சஹானா முன்பு செய்ய சிவா கூச்சப்படுகிறார். இதனால் சிவாவின் டான்ஸ் மாஸ்டர் இனி சஹானாவை இங்கு வர வேண்டாம் என்று கூறிவிடுகிறார். இதனால் சஹானா மொத்தமாக நொந்து போய் வீட்டிற்கு சென்று விடுகிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -