‘என் உயிர காப்பாத்துனதே சிவா தான்’ – ட்விஸ்டை உடைத்த பார்த்தசாரதி! விறுவிறுப்பாகும் “இதயத்தை திருடாதே”!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று பார்த்தசாரதியை சஹானாவின் கண் முன்னே வேற ஒரு குரூப் கடத்தி விடுகிறது. இதனை அடுத்து மீண்டும் சஹானாவை பார்க்கும் வரை கோவிலை விட்டு செல்லப்போவது இல்லை என்று சஹானா சூளுரைக்கிறார்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் பார்த்தசாரதியை சஹானாவின் கண் எதிரே ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று விடுகிறது. இதனால் சஹானா மற்றும் இன்ஸ்பெக்டர் வெற்றி மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர். சிவாவிடம் தான் சொல்லாமல் கொள்ளாமல் வந்த காரணத்தால் தான் இவ்வாறாக நிகழ்ந்து விட்டது என்று சஹானா வருந்துகிறார். பின், இன்ஸ்பெக்டர் வெற்றி வீட்டில் பார்த்தசாரதி இருக்கிறார். அதனை அவரது மனைவி சொல்ல நினைக்கும் போது வெற்றி அவரை பேச விடாமல் தடுத்து விடுகிறார்.

இந்தியாவில் மேலும் 2,34,692 பேருக்கு கொரோனா- 1,341 பேர் பலி!!

வெற்றி மற்றும் பரட்டை இருவரும் பார்த்தசாரதி வீட்டிற்கு சென்று விடுகின்றனர். அங்கே பார்த்தசாரதி இருப்பார் என்று அவர்கள் எதிர்ப்பார்த்து போக அவர்கள் பார்த்தசாரதி உயிருடன் இருப்பதாய் நினைத்து மகிழ்ச்சி அடைகின்றனர். இப்படியாக இருக்க, மீண்டும் பார்த்தசாரதி கோவிலுக்கு வருகிறார். அதே போல் பரட்டை மற்றும் இன்ஸ்பெக்டர் வெற்றியை அங்கு வர சொல்லுகிறார்.

வெற்றி வந்து சிவா குறித்து பார்த்தசாரதியிடம் கேட்கும் போது “என்னோட உயிர காப்பாத்துனதே சிவா தான்” என்று கூறி விடுகிறார்.இதனால் வெற்றி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். தூரத்தில் இருந்து பார்க்கும் சஹானா மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். பின், பார்த்தசாரதி சிவா மற்றும் சஹானா இருவரும் நல்ல கணவன் மற்றும் மனைவியாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார். இனி இருவரும் அப்படியே இருப்பதாக கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், பரட்டை சிவாவிற்கு துரோகம் செய்து விட்டதாக வெற்றி நினைத்து கொண்டு இருக்க, தாங்கள் இருவரும் நடித்ததாக கூறுகின்றனர். பின், தனிமையில் சந்திக்கும் சிவா மற்றும் சஹானா இருவரும் தங்களது அன்பினை பகிர்ந்து கொள்கின்றனர்.இருவரும் சேர்ந்து ஐஸ்வர்யாவின் திருமணத்தை நன்றாக முடிக்க வேண்டும் என்று பேசி கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here