நயன்தாராவுக்கு பிரபல சீரியல் நடிகருடன் இப்படி ஒரு கனெக்சனா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் “இதயத்தை திருடாதே” சீரியலில் கதாநாயகனாக இருக்கும் நவீன் குறித்த தகவல் பலருக்கும் தெரியாது. தற்போது அவர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதயத்தை திருடாதே தொடர்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல் தான், “இதயத்தை திருடாதே” சீரியல். இந்த சீரியல் தற்போது பல வித ட்விஸ்டுகளுடன் நகர்ந்து வருகின்றது. பலருக்கும் அந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகன் சிவா பற்றி தெரியாது என்று தான் கூற வேண்டும். அவரது உண்மையான பெயர் நவீன்.

கார்த்தியின் “சுல்தான்” படம் எப்படி இருக்கு?? திரைவிமர்சனம்!!

இவர் முதன் முதலாக மலையாளத்தில் மணி ரத்னம் இயக்கிய திரைப்படத்தில் தான் நடித்தாராம். அதற்கு பின்பாக பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடியுள்ளார். இதனை அடுத்து இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சுதீப் கிஷனுடன் “மாயவன்” திரைப்படத்தில் அவருடன் நடித்திருப்பார். அதில் இவருக்கு போலீஸ் வேடம். இப்படி சில படங்களில் நவீன் நடித்திருந்தாலும் அவருக்கு பெரும் பெயரினை எடுத்து கொடுத்தது எது என்றால் அது, “இதயத்தை திருடாதே” சீரியல் மூலமாக தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது என்றே சொல்லலாம். அதிலும் இவருக்கும் கதாநாயகியாக நடிக்கும் ஹிமாபிந்துவிற்குமான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.

இவர் நடிகை நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயனுடன் “மிஸ்டர் லோக்கல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களில் இவர் சப்போர்டிங் ரோல் தான் செய்துள்ளார்.  அதில் அவர் எடுத்துக்கொண்டு புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here