‘கோவாக்ஸின்’ முதல்கட்ட பரிசோதனை வெற்றி – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!!

0

கொரோனா நோய்க்கான தடுப்பூசி தயாரிப்பில் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் வெற்றிகண்டுள்ளது. இம்மருந்தை செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி வெற்றி:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து நோய் தடுப்பிற்கான தடுப்பூசி மருந்தை ஆராய்ச்சி செய்து வருகின்றன. பல நாடுகள் சோதனையில் வெற்றி கண்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றிற்கான கோவாக்ஸின் தடுப்பு மருந்தை இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக பரிசீலிக்கப்படும் மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒருவரான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி தற்போது முதல்கட்ட சோதனை முடிவில் மிகவும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இரண்டு வார கால இடைவெளியில் உடலில் செலுத்தப்பட்டு, இரண்டு அளவுகளில் திட்டமிடப்பட்ட இந்த தடுப்பூசி உடலில் நிலையான ஆண்டிபாடியை தூண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஹேமாவின் முடியை எடுக்கும் வெண்பா!!

மேலும் பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த தடுப்பூசி 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 26,000 மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி நடைபெறுவதாக ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here