மீண்டும் உலக கோப்பை இந்தியாவில் தானா?? ஐசிசி வெளியிட்ட அப்டேட்…, முழு விவரம் உள்ளே!!

0
மீண்டும் உலக கோப்பை இந்தியாவில் தானா?? ஐசிசி வெளியிட்ட அப்டேட்..., முழு விவரம் உள்ளே!!
மீண்டும் உலக கோப்பை இந்தியாவில் தானா?? ஐசிசி வெளியிட்ட அப்டேட்..., முழு விவரம் உள்ளே!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) 2023-2031 ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ள உலக கோப்பை தொடர்களுக்கான அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

ஐசிசி அப்டேட்:

சமீபத்தில் டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடர் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். இதற்காக இந்திய அணியானது, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாட தயாராகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், ஐசிசியானது, உலக கோப்பை தொடர்கள் நடைபெற இருக்கும் இடங்கள் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனை தொடர்ந்து, 2027 ல் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா, 2031 ல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்திய அணியில் மீண்டும் இணையும் தோனி?? அப்போ ஐபிஎல் இருந்து விலகுவாரா??

இதே போல, டி20 உலக கோப்பையானது, 2024ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ், 2026ல் இந்தியா மற்றும் இலங்கை, 2028ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, 2030ல் யுனைடெட் கிங்டம் மற்றும் அயர்லாந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதில், அடுத்த வருடம் தனது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் ஒரு நாள் ஓவர் உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here