ஐசிசி மகளிர் தரவரிசை வெளியீடு…, டாப் 10 ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீராங்கனைகள்!!

0
ஐசிசி மகளிர் தரவரிசை வெளியீடு..., டாப் 10 ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீராங்கனைகள்!!
ஐசிசி மகளிர் தரவரிசை வெளியீடு..., டாப் 10 ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீராங்கனைகள்!!

ஐசிசி மற்றும் MRF டயர்ஸ் நிறுவனம் இணைந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

ஐசிசி தரவரிசை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் MRF டயர் நிறுவனம் இணைந்து, மகளிர் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், தற்போது பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டிலும் பாகிஸ்தான் அணியை வென்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த 2 போட்டிகளிலும், பாகிஸ்தானின் சித்ரா அமீனின் 176 மற்றும் 91 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம், இவர் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், டாப் 20 யில் இடம் பிடித்துள்ளார். இந்த தரவரிசையில், முதல் 10 இடங்களில் எந்த ஒரு மாற்றமும் நிகழ வில்லை.

T20 WC சூப்பர் 12 ஆட்டங்கள்.., அதிக விக்கெட் கைப்பற்றியவர்களில் யார் முதலிடம் தெரியுமா??

இதில், இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர்(716), ஸ்மிருதி மந்தனா(714) புள்ளிகளுடன் 5 மற்றும் 6 வது இடத்தில் உள்ளனர். இதே போல, டி20 பேட்டிங் தரவரிசையில், ஸ்மிருதி மந்தனா (730), ஷஃபாலி வர்மா (645) மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (644) என்ற புள்ளிகளுடன் 2, 7 மற்றும் 8 வது இடத்தில் உள்ளனர். டி20 பவுலர்க்கான தரவரிசையில், தீப்தி சர்மா(742), ரேணுகா சிங் (737) மற்றும் சினே ராணா(681) புள்ளிகளுடன் 2,3 மற்றும் 10 வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here