T20 W வேர்ல்ட் கப் 2023: ஒரே தொடரில் 13 பெண் நடுவர்கள்…, ஐசிசி வெளியிட்ட நியூ அப்டேட்!!

0
T20 W வேர்ல்ட் கப் 2023: ஒரே தொடரில் 13 பெண் நடுவர்கள்..., ஐசிசி வெளியிட்ட நியூ அப்டேட்!!
T20 W வேர்ல்ட் கப் 2023: ஒரே தொடரில் 13 பெண் நடுவர்கள்..., ஐசிசி வெளியிட்ட நியூ அப்டேட்!!

மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்கான நடுவர்களை ஐசிசியானது அறிவித்துள்ளது. இதில், இந்தியாவை சேர்ந்த 3 பெண் நடுவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி மகளிர் T20:

ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் 8 வது சீசன் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், அயர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த உலக கோப்பை தொடரில் பங்கு பெற உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த உலக கோப்பை தொடருக்கான, அனைத்து அணிகளையும் அந்ததந்த கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது பெண் நடுவர்களை ஐசிசியானது அறிவித்துள்ளது. இதில், இந்தியா சார்பாக மட்டும் 3 நடுவர்களை ஐசிசி நியமித்துள்ளது. நடுவர்கள் மற்றும் கள நடுவர்கள் என ஒட்டுமொத்தமாக 13 பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். U19 மகளிர் உலக கோப்பையில் 9 பெண் நடுவர்களை ஐசிசி நியமித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

U19 T20i WC: 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த நியூசிலாந்து…, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய இளம் படை!!

கள நடுவர்கள்:

ஜி.எஸ்.லட்சுமி (இந்தியா), ஷான்ட்ரே ஃபிரிட்ஸ் (தென்னாப்பிரிக்கா), மிச்செல் பெரேரா (இலங்கை)

நடுவர்கள்:

சூ ரெட்ஃபெர்ன் (இங்கிலாந்து), எலோயிஸ் ஷெரிடன் (ஆஸ்திரேலியா), கிளாரி பொலோசாக் (ஆஸ்திரேலியா), ஜாக்குலின் வில்லியம்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), கிம் பருத்தி (நியூசிலாந்து), லாரன் ஏஜென்பேக் (தென்னாப்பிரிக்கா), அன்னா ஹாரிஸ் (இங்கிலாந்து), விருந்தா ரதி (இந்தியா), என் ஜனனி (இந்தியா), நிமாலி பெரேரா (இலங்கை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here