ஐசிசி தரவரிசை: விராட் கோலி, சுப்மன் கில், அக்சார் பட்டேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!

0
ஐசிசி தரவரிசை: விராட் கோலி, சுப்மன் கில், அக்சார் பட்டேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!
ஐசிசி தரவரிசை: விராட் கோலி, சுப்மன் கில், அக்சார் பட்டேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!

ஐசிசியின் டெஸ்ட் தொடருக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதன் மூலம், முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஐசிசி தரவரிசை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங்கானது, ஒவ்வொரு வாரமும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வருகிறது. இந்த வகையில், கடந்த வாரம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளிலேயே சர்வதேச அணிகள் அனைத்தும் விளையாடி வந்ததால், டெஸ்டுக்கான தரவரிசையில் பல மாற்றங்கள் எழுந்து உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், டெஸ்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் விராட் கோலி பல மாதங்களுக்கு பிறகு சதம் (186) அடித்ததன் மூலம், 8 இடங்கள் முன்னேறி 705 புள்ளிகளுடன் 13 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், ரிஷப் பண்ட் (9), ரோஹித் சர்மா (10), புஜாரா (25), அக்சார் பட்டேல் (44), ரஹானே (45) மற்றும் சுப்மன் கில் (46) ஆகிய இடங்களில் முன்னேறி உள்ளனர்.

IPL 2023 : ரோஹித்தா.., விராட் கோலியா.., அனல் பறக்கும் முதல் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு???

டெஸ்டின் பவுலர்களுக்கான தரவரிசையில், அஸ்வின் தொடர்ந்து முதலிடத்திலும், பும்ரா 7வது, ஜடேஜா 9வது முகமது ஷமி 19வது அக்சார் பட்டேல் 28வது இடங்களை பிடித்துள்ளனர். மேலும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில், ஜடேஜா மற்றும் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதில், அக்சார் பட்டேல் 2 இடங்கள் முன்னேறி 316 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், இந்தியாவின் 3 ஆல் ரவுண்டர்கள் டாப் 5 யில் இடம் பிடித்து அசத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here