ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியீடு – முதலிடம் பெற்று இந்திய அணி சாதனை!!

0

இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

முதலிடத்தில் இந்தியா:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முடிவடைந்த இந்தப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மைதானத்தில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்று  வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

இதில், மேலும் குறிப்பிடும் வகையில், முதல் இன்னிங்சில் 191 ரன்களும், 2வது இன்னிங்சில் ரோகித் சர்மாவின் அபார சதத்தால், 466 ரன்களும் எடுத்தது. இதனை அடுத்து, இந்திய அணி, 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில்,  ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 54.17% வெற்றி விகிதம் மற்றும் 26 புள்ளிகளுடன், பாகிஸ்தானை அடுத்த இடத்திற்கு தள்ளி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

50 சதவீத வெற்றி விகிதத்துடன் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த செய்தியால் குஷியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here