சர்வதேச இந்திய அணியானது, தற்போது ஆசிய கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள இந்திய அணி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியதன் மூலமும், பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் இலங்கை அணியிடம் தொடர் தோல்வியை சந்தித்ததன் மூலமும் ஐசிசி தரவரிசையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, ஆசிய கோப்பைக்கு முன்பாக ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது 115 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 116 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்தையும் பிடித்துள்ளன. இதன் மூலம், ஐசிசியின் டி20 மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் 2 ம் இடம் பிடித்து அனைத்து வடிவிலான தரவரிசையிலும் முதல் 2 இடங்களில் உள்ள ஒரே அணி என்ற பெருமையை படைத்துள்ளது.