ICC T20 World Cup Schedule: அக்டோபர் 24 இல் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான்!!

0

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவனை தற்போது  வெளியாகியுள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும்.

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் முதலிடம் வகிப்பது இந்த டி20 உலக கோப்பை போட்டி. இந்த போட்டிகள் சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெற உள்ளது.

Group 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர் மோதுகின்றனர். Group 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர் மோதுகின்றனர்.

குறிப்பாக அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியை எதிர்பார்த்து இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

மேலும் முதல் அரை இறுதிப்போட்டி நவம்பர் 10 ஆம் தேதி அபுதாபியிலும், இரண்டாவது அரை இறுதிப்போட்டி துபாயிலும், நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here