ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் ரிலீஸ் – டாப் 10 இல் இந்திய பேட்ஸ்மேன்கள்!!

0

ஐசிசி தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

ஐசிசி தரவரிசை பட்டியல்:

இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் விளையாட்டு துறையை மிகவும் பெரிதாக பாதித்து விட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் மீண்டு வருகிறோம். இந்த ஆண்டு நிறைய சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சில போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது இந்த ஆண்டு 20 ஓவர் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

தரவரிசை

தற்போது பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 7வது இடத்திலும், ரோஹித் சர்மா 14வது இடத்திலும், ஷிகர் தவான் 20வது இடத்திலும் உள்ளனர். மேலும் முதல் இடத்தில் இங்கிலாந்து நாட்டின் டேவிட் மாலன் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் பவுலிங் தரவரிசையில் இந்திய அணி சார்பாக ஒரு வீரர் கூட முதல் 10 இடங்களை பிடிக்கவில்லை. இது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் 12வது இடத்திலும் மற்றும் பும்ராஹ் 19வது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இடம் பெற்றுள்ளார்.

வலை பயிற்சியில் மீண்டும் ரஹானே & புஜாராவை காலி செய்த நடராஜன்!!

அணிகளுக்கான 20 ஓவர் தரவரிசையில் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது. மேலும் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியும், 2வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here