ஐசிசி T20 தரவரிசை வெளியீடு…, நம்பர் 1 ல் சூர்யகுமார்…, மற்ற இந்திய வீரர்களின் இடம்??

0
ஐசிசி T20 தரவரிசை வெளியீடு..., நம்பர் 1 ல் சூர்யகுமார்..., மற்ற இந்திய வீரர்களின் இடம்??
ஐசிசி T20 தரவரிசை வெளியீடு..., நம்பர் 1 ல் சூர்யகுமார்..., மற்ற இந்திய வீரர்களின் இடம்??

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இந்த தரவரிசையில் மற்ற இந்திய வீரர்களின் இடம் குறித்து இப்பதிவில் காணலாம்.

ஐசிசி டி20 தரவரிசை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில், 5 போட்டிகளில் அதிரடியாக விளையாடி 225 ரன்கள் எடுத்ததன் மூலம் 869 புள்ளிகளுடன் கடந்த வாரம் முதலிடத்தை எட்டினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து, உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், பத்து புள்ளிகள் குறைந்து 859 புள்ளிகளை பெற்றார். ஆனாலும், தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருக்கு அடுத்ததாக, பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (836) மற்றும் பாபர் அசாம் (778) 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளனர். இதில் விராட் கோஹ்லி (663), கே எல் ராகுல் (594), ரோஹித் சர்மா (591) புள்ளிகளுடன் 11, 17 மற்றும் 18 வது இடத்தை தக்க வைத்து உள்ளனர்.

தொடரும் boy bestie யின்  அட்டூழியம்.., கள்ள காதலியின்  குழந்தையை  கொன்ற  கொடூரம்..

டி20யின் பவுலர்களுக்கான தரவரிசையில், இலங்கையின் வனிந்து ஹசரங்கா 704 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதில், இந்திய வீரர்களான, புவனேஸ்வர் (637), அஸ்வின் (618), அர்ஷ்தீப் சிங் (615) புள்ளிகளுடன் 14, 21 மற்றும் 22 வது இடத்தில் மாற்றம் இல்லாமல் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில், 203 புள்ளிகளுடன் ஹர்திக் பாண்டியா 3வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here