ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு நிலவும் கடுமையான போட்டி…, இந்தியாவா?? இங்கிலாந்தா?? முழு விவரம் உள்ளே!!

0
ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு நிலவும் கடுமையான போட்டி..., இந்தியாவா?? இங்கிலாந்தா?? முழு விவரம் உள்ளே!!
ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு நிலவும் கடுமையான போட்டி..., இந்தியாவா?? இங்கிலாந்தா?? முழு விவரம் உள்ளே!!

டி20 உலக கோப்பை முடிந்த பிறகு, ஐசிசி வெளியிட்ட அணிகளுக்கான தரவரிசையில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி உள்ளது.

டி20 ஐசிசி தரவரிசை:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டிருந்தது. இந்த பட்டியல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்திருந்தார். இவரை போன்று, பவுலர்களுக்கான தரவரிசையில், இலங்கையின் வனிந்து ஹசரங்கா மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, சமீபத்தில் முடிந்த டி20 உலக கோப்பையின் மூலம் அணிகளுக்கான தரவரிசையில், புள்ளி கணக்கில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது, இந்த உலக கோப்பைக்கு முன்பு இங்கிலாந்து அணி 263 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. தற்போது, சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு 2 புள்ளிகள் மட்டுமே கூடியதே (265) தவிர 2வது இடத்தையை தக்கவைத்து கொண்டுள்ளது.

வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்த ஆட்டம்…, அனல் பறந்த பர்தீப் நர்வாலின் அதிரடி!!

இந்த உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறி இருந்தாலும், 268 புள்ளிகளுடன் முதலிடத்தை தனக்கு சொந்தமாக்கி உள்ளது. இதில், பாகிஸ்தான் அணி 258, தென் ஆப்பிரிக்கா 256, நியூசிலாந்து 253 புள்ளிகளுடன் 3, 4 மற்றும் 5 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே 3 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், விரைவில் இங்கிலாந்து அணி முதலிடத்தை எட்ட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here