ICC வெளியிட்ட ரேங்கிங் லிஸ்ட்.., மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய இந்திய வீரர்!!!

0
ICC வெளியிட்ட ரேங்கிங் லிஸ்ட்.., மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய இந்திய வீரர்!!!
ICC வெளியிட்ட ரேங்கிங் லிஸ்ட்.., மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய இந்திய வீரர்!!!

மும்பையில் நடந்து முடிந்த இந்தியா vs இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் விறுவிறுப்பான முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு 23 பந்தில் 41 ரன்கள் அடித்த தீபக் ஹூடா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதையடுத்து இன்று பூனேவில் 2 வது போட்டி நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் T20 போட்டியில் வீரர்களின் தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இலங்கையுடனான போட்டியில் சரியான ஆட்டத்தை நட்சத்திர வீரர் சூர்யகுமார் வெளிப்படுத்தாவிட்டாலும் பேட்டிங் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதே போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 137 வது இடத்திலிருந்து 97 வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

சன் டிவியை தூக்க, விஜய் டிவி போட்ட பிளான்., இந்த தடவை ஸ்கெட்ச் மிஸ் ஆக வாய்ப்பே இல்லை!!

மேலும் 10 இடங்கள் முன்னேறி 23 வது இடத்தில் இஷாந்த் கிஷன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா என 100 இடங்களில் 8 இந்திய வீரர்கள் முன்னேறியுள்ளனர். மேலும் பவுலிங்கில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்கா, ஆல்ரவுண்டரில் பங்களாதேஷ் அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here