ஐசிசி தரவரிசை வெளியீடு: டாப் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்…, திலக் வர்மா, சுப்மன் கில், குல்தீப் யாதவ் முன்னேற்றம்!!

0
ஐசிசி தரவரிசை வெளியீடு: டாப் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்..., திலக் வர்மா, சுப்மன் கில், குல்தீப் யாதவ் முன்னேற்றம்!!
ஐசிசி தரவரிசை வெளியீடு: டாப் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்..., திலக் வர்மா, சுப்மன் கில், குல்தீப் யாதவ் முன்னேற்றம்!!

ஐசிசியானது, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப, தரவரிசை பட்டியலை வாரந்தோறும் புதுப்பித்து வெளியிடும். இதன்படி, ஒருநாள் தொடரின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 2 இடங்கள் முன்னேறி 5 வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல, இஷான் கிஷன் 9 இடங்கள் முன்னேறி 36 வது இடத்தையும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முறையே 9வது மற்றும் 11 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் பவுலர்களுக்கான தரவரிசையில், குல்தீப் யாதவ் 4 இடங்கள் முன்னிலை பெற்று 10 வது இடத்திலும், முகமது சிராஜ் 4 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கலைஞர் நூற்றாண்டு விழா: திருநங்கைகள் 100 பேருக்கு வீடு…, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு!!

ஆல்ரவுண்டர்களுக்கான வரிசையில் ஹர்திக் பாண்டியா 5 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை எட்டியுள்ளார். டி20 க்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதில், டி20 யின் அறிமுக வீரரான திலக் வர்மா 21 இடங்கள் முன்னேறி 46 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதே போல பவுலிங்கான தரவரிசையில் 24 இடங்கள் முன்னேறி குல்தீப் யாதவ் 51 வது இடத்தை எட்டியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில், அஸ்வின் மற்றும் ஜடேஜா பவுலிங் மற்றும் ஆல் ரவுண்டரில் டாப் 3 ல் இடத்தை தக்க வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here