ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை தட்டிச்சென்ற பாகிஸ்தான் வீரர்…!கோலியை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!!!

0

ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தை பிடித்து உள்ளார். இதன் மூலம் இவர் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தக்க வைத்து உள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டிகள் நடந்து முடிவு பெற்றது. அதன் பிறகு ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் அந்த அணிக்கு எதிரான 3வது  ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 150 ரன்களை எடுத்து தரவரிசையில் முதலிடத்தை பிடித்து உள்ளார். மேலும் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த விராட் கோலி இரண்டாவது இடத்தையும் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தையும் பிடித்து உள்ளார்.

இதே போல் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையை பொறுத்தவரை  வங்கதேச சாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். முகமது நபி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். மேலும் இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா  ஒன்பதாவது இடத்தில் தொடர்கிறார்.அதே போல் பந்துவீச்சில்  ட்ரெண்ட் போல்ட் என்ற நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா என்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆறாவது இடத்தை பிடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here