சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு மாதம் தோறும் பெருமை படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளங்கிய வீரரை தேர்வு செய்து ICC விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர், வீராங்கனைகள் பெயரை தற்போது ICC அறிவித்து உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, தென்னாபிரிக்காவின் குயின்டன் டி காக் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரன் ஆகியோரும், வீராங்கனைகளுக்கான பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேலி மேத்யூஸ், நியூசிலாந்து அணியின் அமெலியா கெர் மற்றும் பங்களாதேஷின் நஹிதா அக்டர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆடவர் மற்றும் மகளிர் பட்டியலில் ஒரே இந்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.