player of the month: ஐசிசியின் சிறந்த வீராங்கனை இந்த மூவரில் யார்??

0
player of the month: ஐசிசியின் சிறந்த வீராங்கனை இந்த மூவரில் யார்??
player of the month: ஐசிசியின் சிறந்த வீராங்கனை இந்த மூவரில் யார்??

ஐசிசியானது ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யும் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி:

ஐசிசியானது கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியானது, கடந்த மாதத்தில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த இரு தொடரையும் ஆஸ்திரேலிய அணியானது முழுவதுமாக கைப்பற்றி அசத்தியது. இதில், மிக சிறப்பாக விளையாடிய, ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஒருநாள் தொடரில், 2 அரைசதம் உட்பட 154 ரன்களை அடித்து ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரையில் இடம் பெற்றுள்ளார்.

“உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் அணி இதுதான்”…, மனம் திறந்த கிறிஸ் கெய்ல்!!

இவரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 237 ரன்களை பாகிஸ்தான் அணிக்கு எதிராக குவித்திருந்தார். மேலும், 19 வயது உட்பட்டோருக்கான டி20 உலக கோப்பையில் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரையில் இணைந்துள்ளனர். இந்த பரிந்துரையில், U19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில், ஓர் இந்திய வீராங்கனை கூட இடம் பெறாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here