டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி!!

0
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி!!
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ஐசிசி!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரருக்கு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற விருதை ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி விருது:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒவ்வொரு மாதத்திற்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில், சிறந்த வீரரை ஐசிசியானது அறிவித்துள்ளது. கடந்த மாதம் அதிக அளவில் டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றதால் இதில் சிறந்த வீரருக்கே ஐசிசி விருதை வழங்கி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, கடந்த மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடியது. இந்த 3 டெஸ்ட் போட்டியையும் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதில், இங்கிலாந்தின் ஹாரி புரூக் மூன்று சதம், ஒரு அரைசதம் (153, 87, 9, 108, 111) உட்பட 468 ரன்களை குவித்துள்ளார்.

ஒருநாள் தொடரில் உயர்ந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா…, இலங்கை அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்!!

இதன் மூலம், இங்கிலாந்தின் ஹாரி புரூக்கை (player of the month) டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக ஐசிசியானது தேர்வு செய்துள்ளது. ஹாரி புரூக் கடந்த வருடம் தான் சர்வதேச அணிக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகமான சில மாதத்திலேயே ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்று அசத்தியுள்ளார். இதுவரை இவர், 4 டெஸ்டில் 480 ரன்களையும், 20 டி20யில் 372 ரன்களையும் குவித்துள்ளார். இதே போல பெண்களுக்கான ஐசிசி விருதில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் தேர்வாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here