Thursday, May 13, 2021

விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் வீரர் – குவியும் பாராட்டுக்கள்!!

Must Read

ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை புள்ளி பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் நீடித்து வந்த விராட் கோஹ்லியை தற்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.

ஒரு நாள் தரவரிசை:

சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் சேகரிக்கும் ரன்கள், விக்கெட்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி அதற்கு புள்ளிகள் வழங்கி வருகிறது ஐசிசி. மேலும் அதற்கான புள்ளி பட்டியலையும் அவ்வப்போது ஐசிசி வெளியிட்டு வரும். அந்த வகையில் ஒரு நாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசையில் பல வருடங்களாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதல் இடத்தில் நீடித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் சுமார் 41 மாதங்களாக முதல் இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு விராட் கோஹ்லி பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுக்களை பெற்று வந்தார். தற்போது 41 மாதங்களாக முதல் இடத்தில் நீடித்த கோஹ்லியை பாகிஸ்தான் அணி கேப்டன் பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒரு நாள் போட்டியை விளையாடியது.

#DCvsRR இரண்டு புதிய கேப்டன்களுக்கு இடையே மோதல் – வெல்லப்போவது யார்? பதட்டத்தில் ரசிகர்கள்!!

அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபரின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது. 3வது போட்டியில் கேப்டன் பாபர் அசாம் 94 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஐசிசி தரவரிசை புள்ளி பட்டியலில் 13 புள்ளிகள் அதிகரித்து 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்த 4வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பாபர் அசாம் பெற்றுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இந்த டாப் ஹிட் படத்தை மிஸ் செய்த சிம்பு – இப்போ புலம்பி என்ன ப்ரோஜனும்??

வெள்ளித்திரையில் வெற்றிநடை போட்ட கோ படத்தின் நடிக்க இருந்தது என்ற தகவல் வைரலாகி வருகிறது. மேலும் சிம்பு 50% வரை நடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சிம்புவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -