ஐசிசி தரவரிசை: இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்…, நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ஆஸ்திரேலியா!!

0
ஐசிசி தரவரிசை: இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்..., நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ஆஸ்திரேலியா!!
ஐசிசி தரவரிசை: இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்..., நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ஆஸ்திரேலியா!!

ஐசிசியின் வருடாந்திர புதுப்பித்தலில் ஆஸ்திரேலிய அணி தனது நம்பர் 1 ஒருநாள் தொடர் அணிகளுக்கான தரவரிசையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஐசிசி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ தொடர்களுக்கு ஏற்ப உலக கோப்பை போட்டிகளில் சீரான இடைவெளியில் நடத்தி வருகிறது. இந்த வகையில், டி20 உலக கோப்பை தொடர் கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி வரும் ஜூன் மாதமும், ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதமும் நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், கடந்த 2019 ஆண்டு பிறகு ஒருநாள் உலக கோப்பை தொடர், இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான, இருதரப்பு ஒருநாள் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஐசிசியானது அணிகளுக்கான தரவரிசை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலிய அணியானது 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என கணக்கில் பாகிஸ்தான் வென்றதன் மூலம், 116 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. மேலும், 115 புள்ளிகளுடன் இந்தியா 3 வது இடத்திலும், நியூசிலாந்து 104 மற்றும் இங்கிலாந்து 101 புள்ளிகளுடன் 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here