ஐசிசியின் உயர்ந்த இடத்தை எதிர்நோக்கி இந்தியா…, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியால் நிகழுமா??

0
ஐசிசியின் உயர்ந்த இடத்தை எதிர்நோக்கி இந்தியா..., நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியால் நிகழுமா??
ஐசிசியின் உயர்ந்த இடத்தை எதிர்நோக்கி இந்தியா..., நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியால் நிகழுமா??

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் உயர்ந்த இடத்தை அடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற 2வது போட்டியில், இந்திய அணி அசத்தலான பந்து வீச்சால், 108 ரன்கள் சுருட்டியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த எளிய இலக்கை அடைந்த இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியை கைப்பற்றியதுடன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது. இதனால், நேற்று புதுப்பிக்கப்பட்ட, ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில், இந்திய அணி 113 புள்ளிகளுடன் 3வது இடத்தை எட்டி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஒருநாள் தரவரிசையின் முதலிடத்தை பிடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வந்த ஜடேஜா…, ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக அதிரடி காட்டுவாரா??

ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவதற்காக நாளை போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே 113 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும், இந்திய அணிக்கு எதிராக ஆறுதல் வெற்றியாவது பெறவும் நாளை போட்டியில் அதிக நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here