ஐசிசியின் மூன்று வடிவ தொடரில் சாதனை படைத்த இந்தியா…, அசைக்க முடியாத இடத்தை பிடித்து அசத்தல்!!

0
ஐசிசியின் மூன்று வடிவ தொடரில் சாதனை படைத்த இந்தியா..., அசைக்க முடியாத இடத்தை பிடித்து அசத்தல்!!
ஐசிசியின் மூன்று வடிவ தொடரில் சாதனை படைத்த இந்தியா..., அசைக்க முடியாத இடத்தை பிடித்து அசத்தல்!!

இந்திய அணியானது, ஐசிசியின் மூன்று வடிவ கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையிலும் சிறந்த ஒரே அணியாக வலம் வருகிறது.

ஐசிசி:

இந்திய அணியானது, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட, டி20 தொடரின் கடைசி டி20 போட்டியை இன்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளை, இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால், இன்று நடைபெற இருக்கும் போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் விளைவாக, இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2012 ஆண்டுக்கு பிறகு, நியூசிலாந்து அணியானது, இந்தியாவை வீழ்த்தி அதன் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றியது இல்லை. இதனால், தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை நியூசிலாந்து அணி பயன்படுத்துமா இல்லை இந்திய அணி அந்த சாதனையை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்து வருகின்றன.

இதற்கிடையில், இந்திய அணியானது, ஐசிசி தரவரிசையில் மகத்தான சாதனை படைத்த அணியாக திகழ்கிறது. அதாவது, கிரிக்கெட்டின் மூன்று வடிவ தொடர்களிலும், டாப் 3 ல் உள்ள ஒரே அணியாக இந்திய அணி உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் தொடருக்கான தரவரிசையில் 2வது இடத்தையும் இந்திய அணி பிடித்து அசத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here