ஐசிசி நிர்வாகம் சார்பில் சர்வதேச T20 தொடருக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் வரிசையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்திய வீரர்
உலக அளவில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளும் சர்வதேச தொடர்களில் விளையாடி வருகின்றனர். அதன்படி இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணியுடன் டி20 போட்டியில் விளையாடி தொடரை வென்றது. இந்த போட்டியின் முடிவில் டி20 தொடரில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலுக்கான முதலிடத்தில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான் உள்ளார். இவரை தொடர்ந்து 3 ம் இடத்தில் இருந்த சூர்யகுமார் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அசாம் ஓரங்கட்டப்பட்டு தற்போது 3 ஆம் இடத்தில் உள்ளார்.
மேலும் கூடிய விரைவில் முகமது ரிஸ்வானையும் பின்னுக்கு தள்ளுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிறகு ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது. இதனை தொடர்ந்து பந்து வீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் 4 வது இடத்தில் இருந்த ஸ்ரீலங்கா வீரர் வணிந்து ஹசரங்கள் தற்போது 3 ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.