ஐசிசி சார்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், சர்வதேச அளவிலான 10 அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. இதில், இலங்கை அணியானது 9 போட்டிகளில் 2 ல் மட்டுமே வெற்றி பெற்று, 7ல் தோல்வி அடைந்துள்ளதால் நடப்பு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
பிரபல நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!
இந்த தொடரில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன்பிறகு, இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக நீக்கி உள்ளதாக அறிவித்தார். தற்போது இதன் எதிரொலியாக, இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை ஐசிசி இடை நிறுத்தியுள்ளது.