ஐசிசி சார்பாக இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான, அணிகள், மைதானங்கள், போட்டி நடைபெறும் நேரம் மற்றும் நாள் உள்ளிட்ட பலவற்றை அடங்கிய பட்டியலை ஐசிசி உடன் இணைந்து பிசிசிஐயும் அறிவித்தது. தற்போது, இந்த உலக கோப்பை தொடங்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருப்பதால், போட்டி நடைபெறும் மைதானங்களை தயார் நிலையில் வைக்கும் பணியில் ஐசிசி மற்றும் பிசிசிஐ மும்மரமாக இறங்கி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் பனி பொழிவு அதிகம் இருக்கக் கூடும் என்பதால், ஐசிசி மைதானங்களை பராமரிப்பதில் சில அறிவித்தலை வழங்கியுள்ளது. அதாவது, பனிப்பொழிவு காரணமாக டாஸ் போடுவதில் அதிக பாதிப்பு ஏற்படாத வண்ணம், ஆடுகளத்தில் அதிக புல், எல்லை அளவு 70 மீட்டருக்கு மேல் இருத்தல், ஈரமாக்கும் முகவர் பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை கியூரேட்டர்களுக்கு ஐசிசி வழங்கியுள்ளது.