ஐசிசி சார்பாக இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் சமீபத்தில் முடிந்த நிலையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
நாளை (நவம்பர் 15) மற்றும் நவம்பர் 16 ஆம் தேதிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயும் அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மழை உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டால் ரிசர்வ் நாட்களில் நடைபெறும் என ஐசிசி உறுதிப்படுத்துகிறது. மேலும், ரிசர்வ் நாட்களிலும் போட்டி தடைப்பட்டால் லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என தகவல் வெளியாகி உள்ளது.
உலக கோப்பை 2023 IND vs NZ: வானிலை-பிட்ச் யாருக்கு சாதகம்?? வெற்றி பெறுமா இந்தியா?