ஐசிசி T20.., பெஸ்ட் XI னில் விராட் கோலி, சூர்யகுமார், மந்தனா, தீப்தி!!

0
ஐசிசி T20.., பெஸ்ட் XI னில் விராட் கோலி, சூர்யகுமார், மந்தனா, தீப்தி!!
ஐசிசி T20.., பெஸ்ட் XI னில் விராட் கோலி, சூர்யகுமார், மந்தனா, தீப்தி!!

ஐசிசியின் பெஸ்ட் டி20 அணியில், இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி T20:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங்கானது, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளின் அடிப்படையில், 11 பேர் கொண்ட சிறந்த டி20 அணியை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், ஐசிசி டி20 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில், மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த ஆசிய கோப்பையில் தனது முதல் டி20 சதத்தை அடித்த விராட் கோலியும், இந்தியாவின் 360 டிகிரி நாயகன் சூர்யகுமார் யாதவும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இணைந்துள்ளனர். ஆல்ரவுண்டருக்கான வரிசையில், ஹர்திக் பாண்டியா ஐசிசியின் பெஸ்ட் லெவனில் இடம் பெற்றுள்ளார். இவர்களை போல, ஐசிசியின் மகளிருக்கான டி20 அணியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரேணுகா, ரிச்சா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

சச்சின் வரிசையில் ரோஹித் சர்மா…, சாதனை பட்டியலில் இணைந்து அசத்தல்!!

ஐசிசியின் பெஸ்ட் T20 லெவன் மென்ஸ்

ஜோஸ் பட்லர் (சி) (இங்கிலாந்து), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), விராட் கோலி (இந்தியா), சூர்யகுமார் யாதவ் (இந்தியா), கிளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா), சாம் கர்ரன் (இங்கிலாந்து), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஹாரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்), ஜோஷ் லிட்டில் (அயர்லாந்து).

ஐசிசியின் பெஸ்ட் T20 லெவன் விமென்ஸ்

ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), சோஃபி டெவின் (சி) (நியூசிலாந்து), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தஹிலா மெக்ராத் (ஆஸ்திரேலியா), நிடா தர் (பாகிஸ்தான்), தீப்தி சர்மா (இந்தியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), இனோகா ரணவீர (இலங்கை), ரேணுகா சிங் (இந்தியா).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here